எங்களுக்கு எவனாலும் நெருக்கடி கொடுக்க முடியாது. அது ஆண்டவனால் கூட முடியாது. – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான ஒப்பீடு செய்து கருத்து தெரிவித்ததும், அதற்கு பதில் அளிக்கும் விதமாக, அதிமுகவினரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால், அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் எதுவும் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.
கூட்டணி விரிசல் இல்லை :
இதற்கு நேற்று பதில் கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என கூறியிருந்தார். அதனை அடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ஜெயலலிதாவுடன் ஒப்பீடு :
அவர் கூறுகையில், அம்மாவோடு (ஜெயலலிதா) ஒப்பிடுவதற்கு எங்களை பொறுத்தவரை இங்கு யாரும் இல்லை. இனி அவ்வாறு ஒருவர் உருவாகபோவதுமில்விலை. உருவாகவும் முடியாது என குறிப்பிட்டார். மேலும், பாஜக தலைவர் கூறிய கருத்துக்கள், நாங்கள் கூறிய கருத்துக்கள் எல்லாம் முடிந்துவிட்டது என கூறினார்.
பாஜக கூட்டணி :
மேலும், பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்கிறார். தமிழ் கலாச்சாரத்தை கொண்டு உலக அரங்கில் எடுத்து செல்கிறார். அந்த வகையில் நாங்கள் மோடியை ஆதரிக்கிறோம் என பாஜக கூட்டணி பற்றி பேசினார். மேலும், பாஜகவிடம் இருந்து இனிமேல் இது போன்ற கருத்துக்கள் வராது. இனிமேல் வந்தால் தான் அதனை பிறகு பார்த்துக்கொள்ளலாம். என கூறினார்.
அதிமுகவுக்கு நெருக்கடி :
மேலும், எங்கள் கொள்கை வேறு , கூட்ட்டணி வேறு. கூட்டணி எப்போது வேண்டுமானாலும் வரும் போகும். என குறிப்பிட்ட அவரிடம், உங்களுக்கு பாஜக தேசிய தலைமையில் இருந்து ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா என கேட்கப்பட்ட போது, எங்களுக்கு எவனாலும் நெருக்கடி கொடுக்க முடியாது. அது ஆண்டவனால் கூட முடியாது. என கூறினார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…