“எந்த கொம்பனாலும் இரட்டை இலையை முடக்க முடியாது” – ஜெயக்குமார்

Published by
அகில் R

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தேர்தலுக்கு முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில்  உள்துறை அமைச்சரான அமித்ஷா அதிமுகவின் கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என கூறினார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ” எங்களது அரசியல் முன்னோடிகளும், குருக்களும் ஆன பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மா அவர்களை தொடர்ந்து விமர்சித்து வரும் போக்கு சரியில்லை, மேலும் பாஜக கட்சியை தமிழக மக்கள் யாரும் விரும்பவில்லை. அப்படி இருக்கும் ஒரு சூழ்நிலையில் தான் ஏற்கனவே அதிமுக கட்சியினால், பாஜகவோட என்றும் எப்பொழுதும் கூட்டணி கிடையாது என ஒரு ஒருமித்த கருத்து எடுக்கபட்டது.

அதன் அடைப்படையில் எங்களது கதவுகள் அடைக்கபட்டுவிட்டது. அதுதான் அதிமுக கட்சியின் தற்போதைய நிலைப்பாடு,  அவர்கள் வேண்டுமென்றால் யாருக்காவும் கதவுகளை திறந்து வைக்கட்டும் ஆனால் எங்களுடைய கதவு மூடபட்டுவிட்டது. எப்போதும் பாஜகவோடு கூட்டணி  கிடையாது. அவர்களது கருத்தை அவர்கள் கூறி விட்டனர். இது எனது கருத்து, முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம், பின் வாங்கவும் மாட்டோம், இந்த நிலை எப்போதுமே தொடரும்” என கூறினார்.

பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்.! 

கூட்டணி குறித்து ஓபிஎஸ் அணியினர் அழுத்தம் காரணமாக இந்த கருத்து பாஜக தரப்பில் வந்து இருக்கலாமா..? என செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்க்கு “யார் அழுத்தம் கொடுத்தாலும் எங்களுக்கு என்ன, பொதுமக்களும், 2 கோடி தொண்டர்களும் இதை விரும்பவில்லை எனவும் இந்த கருத்தை நாங்கள் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டோம் அதில் மாற்று கருத்து இல்லை. அதனால் எங்களுக்கு எதை பற்றியும் கவலை இல்லை.

இரட்டை இலையை முடக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கு என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக  செய்தியாளர் கேள்வியை எழுப்பினார். அதற்கு, “எந்த கொம்பனாலும் இரட்டை இலையை முடக்க முடியாது” என பதிலளித்தார்.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

4 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

5 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

6 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

7 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

10 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

10 hours ago