“எந்த கொம்பனாலும் இரட்டை இலையை முடக்க முடியாது” – ஜெயக்குமார்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தேர்தலுக்கு முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் உள்துறை அமைச்சரான அமித்ஷா அதிமுகவின் கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என கூறினார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ” எங்களது அரசியல் முன்னோடிகளும், குருக்களும் ஆன பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மா அவர்களை தொடர்ந்து விமர்சித்து வரும் போக்கு சரியில்லை, மேலும் பாஜக கட்சியை தமிழக மக்கள் யாரும் விரும்பவில்லை. அப்படி இருக்கும் ஒரு சூழ்நிலையில் தான் ஏற்கனவே அதிமுக கட்சியினால், பாஜகவோட என்றும் எப்பொழுதும் கூட்டணி கிடையாது என ஒரு ஒருமித்த கருத்து எடுக்கபட்டது.
அதன் அடைப்படையில் எங்களது கதவுகள் அடைக்கபட்டுவிட்டது. அதுதான் அதிமுக கட்சியின் தற்போதைய நிலைப்பாடு, அவர்கள் வேண்டுமென்றால் யாருக்காவும் கதவுகளை திறந்து வைக்கட்டும் ஆனால் எங்களுடைய கதவு மூடபட்டுவிட்டது. எப்போதும் பாஜகவோடு கூட்டணி கிடையாது. அவர்களது கருத்தை அவர்கள் கூறி விட்டனர். இது எனது கருத்து, முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம், பின் வாங்கவும் மாட்டோம், இந்த நிலை எப்போதுமே தொடரும்” என கூறினார்.
பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்.!
கூட்டணி குறித்து ஓபிஎஸ் அணியினர் அழுத்தம் காரணமாக இந்த கருத்து பாஜக தரப்பில் வந்து இருக்கலாமா..? என செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்க்கு “யார் அழுத்தம் கொடுத்தாலும் எங்களுக்கு என்ன, பொதுமக்களும், 2 கோடி தொண்டர்களும் இதை விரும்பவில்லை எனவும் இந்த கருத்தை நாங்கள் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டோம் அதில் மாற்று கருத்து இல்லை. அதனால் எங்களுக்கு எதை பற்றியும் கவலை இல்லை.
இரட்டை இலையை முடக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கு என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக செய்தியாளர் கேள்வியை எழுப்பினார். அதற்கு, “எந்த கொம்பனாலும் இரட்டை இலையை முடக்க முடியாது” என பதிலளித்தார்.