அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை கோவிந்தராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சசிகலா ட்வீட்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அரசு கொறடா, மாநில விவசாயப் பிரிவு செயலாளருமான மூத்த முன்னோடி சகோதரர் திரு. துரை கோவிந்தராஜன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இவரது மறைவுக்கு சசிகலா அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அரசு கொறடா, மாநில விவசாயப் பிரிவு செயலாளருமான மூத்த முன்னோடி சகோதரர் திரு. துரை கோவிந்தராஜன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
அன்புசகோதரர் திரு.துரை கோவிந்தராஜன் அவர்கள் கழகத்தின் மீதும்,நம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீதும்,என் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டவர். கழக தொண்டர்களை அன்போடு அரவணைத்து செல்லக்கூடியவர். கழகத்திற்காக அவர் ஆற்றிய பணிகளை யாராலும் ஈடு செய்ய முடியாதது.
திரு. துரை கோவிந்தராஜன் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…