திருக்குறளை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது – வைகோ
திருக்குறளை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், உலகம் உள்ளளவும், மனிதகுலம் உள்ளளவும் திருவள்ளுவர் புகழிருக்கும் .திருவள்ளுவர் எந்த நாட்டையும் குறிப்பிடாதவர், தமிழ் என்று கூட குறிப்பிடாததால் தான் உலகப் பொதுமறை.
திருவள்ளுவர் திருக்குறளில் மதம்,மொழி உள்ளிட்ட எதையும் குறிப்பிட்டதில்லை.திருக்குறளை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசுவது மன்னிக்க முடியாத செயல். தஞ்சை மாவட்டத்தில் வள்ளுவர் சிலை அழுக்காக்கப்பட்டது தமிழகத்தில் வெட்கக்கேடான காரியம் என்று தெரிவித்துள்ளார்.