உண்மையான விசுவாசத்துடன் பணியாற்றினால் எம்.எல்.ஏக்களை யாராலும் விலைகொடுத்து வாங்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை நேற்று தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதனையடுத்து அந்த 5 மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். அங்கு வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பலர், உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைதொடர்ந்து ராகுல் காந்தி, தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் அக்கட்சியின் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடினார். அப்பொழுது பேசிய அவர், நாடாளுமன்றம், நீதிமன்றம், ஊடகம் என அனைத்து ஜனநாயக தூண்களையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது கைக்குள் வைத்திருப்பதாக கூறினார்.
காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்வதற்கு அதிகார பலமும், பண பலமுமே முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், உண்மையான விசுவாசத்துடன் பணியாற்றினால் எம்.எல்.ஏக்களை யாராலும் விலைகொடுத்து வாங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : ஒரு பக்கம் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகவிருக்கும் நிலையில், மறுபக்கம் கார் ரேஸுக்கு தயாராகி வருகிறார். அஜித்…
நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்…
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…