ஓமைக்ரான் பரவல் 10% நெருங்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த நிலையில், தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. கடந்த மாதம் தென்ஆப்ரிக்காவில் ஒருவருக்கு ஓமைக்ரான் கண்டறியப்பட்டது. சமீபகாலமாக பல நாடுகளில் கொரோனா வேகமாக பரவுவதற்கு ஓமைக்ரான் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
இந்த ஓமைக்ரான் வைரஸ் டெல்டாவை விட 5 மடங்கு வேகத்தில் பரவி வருவதாக கூறப்படுகிறது. நேற்று ஒமைக்ரான் பரவல் குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, ஒமைக்ரான் அச்சுறுத்தலால் உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கவும், இரவு ஊரடங்கு, பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. ஒமிக்ரான் பரவல் 10% நெருங்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க திட்டம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது வரை 17 மாநிலங்களில் 358 பேருக்கு ஓமைக்ரான் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 114 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…