புதிதாக நிலம் கையகப்படுத்தப்படாது.. கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் – அமைச்சர்
என்எல்சி-க்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேட்டி.
கடலூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், என்எல்சிக்காக புதிதாக நிலம் ஏதும் கையகப்படுத்தப்படாது என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். என்எல்சி-க்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை.
ஏற்கனவே கையப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் என்றும் நிலம் கொடுத்தவர்களுக்கு திருப்திகரமான முறையில் இழப்பீடு, வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார். மேலும், 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க என்எல்சி நிறுவனம் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, பாமக எம்எல்ஏக்கள் சதாசிவம், சிவகுமார் ஆகியோர் என்எல்சி விவகாரம் தொடர்பாக அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.