புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை ! பச்சை மண்டலத்தை நோக்கி தூத்துக்குடி

Default Image

தூத்துக்குடி மாவட்டம் பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு மாவட்டங்களை மத்திய அரசு சிவப்பு,ஆரஞ்சு மற்றும் பச்சை என்று பிரித்து உள்ளது.அதன் அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டை பொருத்தவரை கிருஷ்ணகிரி மட்டும் பச்சை மண்டலத்தில் உள்ளது.இதேபோல் தூத்துக்குடி மாவட்டமும் பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆகும்.இதில் ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 26 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் தூத்துக்குடி மாவட்டம் கடந்த 16 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்து வருகிறது.அரசின் உத்தரவுப்படி தொடர்ந்து 21 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களை பச்சை மண்டலமாக அறிவித்து வருகிறது.தூத்துக்குடியில் கடையாக கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதன் பின்னர் அங்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை.எனவே இன்னும் 5 நாட்கள் எந்த பாதிப்பும் இல்லை என்றால் தூத்துக்குடி மாவட்டம் பச்சை மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.தற்போது ஆரஞ்சு மண்டலத்தில் தூத்துக்குடி உள்ளது.  

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
sarathkumar
Thirukarthigai (1)
ipl 2025 yuvraj singh
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date