சிதம்பரம் ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் நிறுவனம் முறைகேடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று இரவு முதல் சிபிஐ அதிகாரிகள் நான்கு முறைக்கு மேலாக ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்று அதிகாரிகள் சோதனையிட்டு நோட்டீஸ் ஒட்டினார்கள்.ஆனால் சிதம்பரம் அவரது வீட்டில் இல்லை. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சிதம்பரம் வழக்கில் நீதிமன்றமே தன்னுடைய கருத்தை தெளிவாக தெரிவித்துள்ளது.அதாவது வழக்கின் மூளையாக சிதம்பரம் செயல்பட்டு உள்ளார் என்று நீதிமன்றமே தெரிவித்துள்ளது. ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றம் முன் ஜாமீனை மறுத்த பின்பே சி.பி.ஐ நடவடிக்கை எடுத்துள்ளது.எனவே அவர் ஓடி ஒளிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…