இனி ரேஷன் கடைக்கு போகவேண்டிய அவசியம் இல்லை ..!
இப்போது அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர்.அதிலும் புதிய ஆப் வசதிகள் உள்ளன . இந்தியா பொறுத்தவரை அனைத்து மாநிலங்களிலும் ரேசன் கடைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி ரேசன் கடைகளில் பொருட்களின் இருப்பு விபரத்தை தினசரி தெரிந்து கொள்ள முடியும், அதற்கு தகுந்த ஆப் வசதி இருக்கின்றது. இந்த ஆப் வசதி மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆப் பெயர் என்னவென்றால் TNEPDS -என்று கூறப்படுகிறது. மேலும் இவற்றின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிளே ஸ்டோர் வழியாக TNEPDS- செயலியை(ஆப்) பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தல் வேண்டும்.
குறிப்பாக 7எம்பி அளவைக் கொண்டுள்ளது இந்த TNEPDS-செயலி, அதன்பின்பு இந்த செயலியை திறந்து உங்களுடைய மொபைல் எண் பதிவிட வேண்டும். குறிப்பாக உங்கள் ஸ்மார்ட் கார்டில் இருந்த மொபைல் எண்ணை இந்த செயலியில் பதிவிட வேண்டும்
அடுத்து உங்கள் மொபைல் நம்பருக்கு அந்த செயலியில் இருந்து ஒடிபி -அனுப்பிவைக்கப்படும், பின்பு அந்த ஒடிபி-எண்ணை அந்த செயலியில் பதிவிட வேண்டும்.
பின்பு இந்த செயலியில் ஸ்மார்ட் அட்டை செயல்படுத்துதல், உரிமம், பரிவர்த்தனைகள், புகார் பதிவுகள், என் விவிரக்குறிப்புகள், கடை வேலை நேரங்கள், கடை சரக்கு இருப்பு, ஆதார் பதிவு போன்ற அனைத்து விருப்பங்களும் இருக்கின்றது. இதைப் பயன்படுத்தி அனைத்து தகவல்களையும் பெற முடியும்.
குறிப்பாக இந்த செயலியில் இருக்கும் கடை சரக்கு எனும் விருப்பத்தை கிளிக் செய்தால் போதும், அரிசி, சக்கரை, மண்ணெண்ய் போன்றவை எவ்வளவு இருக்கின்றது என்று தெரிந்துகொள்ள முடியும்.