ஓபிஎஸ்-ஐ பரப்புரைக்கு அழைக்க அவசியமில்லை – ஜெயக்குமார்

Default Image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வத்தை பரப்புரைக்கு அழைக்க தேவையில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சிபி ராதாகிருஷ்ணன் அவரக்ளுக்கு பாராட்டு விழாவில் கலந்துகொள்ள அதிமுகவுக்கு அழைப்பு வந்தது. அதிமுக சார்பில் என்னை கலந்துக்கும்படி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதனடிப்படையில் நான் கலந்துகொண்டேன். ஓபிஎஸ் கலந்துகொள்ளவில்லை என்றால் அவரை தான் கேட்க வேண்டும் என செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்தார்.

ADMK OPS

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்க வேண்டிய அவசியமில்லை, அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இதனால் பிரச்சாரத்துக்கு அழைக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார். ஈரோட்டில் சுதந்திரமான, ஜனநாயக முறைப்படி அமைதியாக தேர்தல் நடத்த வேண்டும் எனபதே அதிமுகவின் வேண்டுகோள். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புளகர் அளித்துள்ளோம், அவர்களும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்