முதலமைச்சர் வெளிநாடு செல்வதால் கேர்டேக்கர் ஒருவரை நியமிக்க வேண்டும் என அவசியமில்லை-அமைச்சர் ஜெயக்குமார்
முதலமைச்சர் வெளிநாடு செல்வதால் கேர்டேக்கர் ஒருவரை நியமிக்க வேண்டும் என அவசியமில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் .
இந்த நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,முதலமைச்சர் பழனிச்சாமி வெளிநாட்டிற்கு சென்றாலும் முக்கிய முடிவுகள் அனைத்தையும் அவரே எடுப்பார்.முதலமைச்சர் வெளிநாடு செல்வதால் கேர்டேக்கர் ஒருவரை நியமிக்க வேண்டும் என அவசியமில்லை.முதலமைச்சர் வெளிநாடு செல்வதன் மூலம் தமிழகத்திற்கு அதிக முதலீடுகள் கிடைக்கும் என்றும் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தேர்தல் ஆணைய விதிப்படி கண்டிப்பாக நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.