“புதிய மழைநீர் வடிகால் பணிகள் வேண்டாம்., 6 படகுகள் ரெடி.” சென்னை மேயர் பிரியா அப்டேட்.!
சென்னை மாநகராட்சிக்கு 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளன அதில் 6 படகுகள் தற்போது வரை வந்துள்ளன என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆண்டுதோறும் நவம்பர் , டிசம்பர் மாதம் வருகிறது என்றாலே பருவமழை பொழியும், குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் அதிகளாவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இப்படியான சூழலில் ஆண்டுதோறும் அதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது.
இந்தாண்டும் பருமவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தாண்டு சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை மேயர் பிரியா நேற்று சேத்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், ” கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் அதிக மழை பெய்தது. இந்த ஆண்டு நவம்பர் மாதமே மழை பெய்துவிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பெரும்பாலானபகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இனி புதியதாக எந்த இடத்திலும் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளோம். தேவை இருப்பின் மழைநீர் வடிகால் பணிகள் தொடங்குங்கள் என்றும் கூறியுள்ளோம். பருவமழையை எதிர்கொள்ள முகாம்கள் அமைப்பது , தன்னார்வர்களை வரவைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை சிட்டி உட்பட்ட பகுதி மட்டுமல்லாமல், தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கும் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொசஸ்தலை பகுதியில் 80 சதவீத வடிகால் பணிகள் நிறைவுபெற்று விட்டன. கோவளம் பகுதியிலும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த முறையை விட இந்த முறை அதிக மழை இருக்கும் என கூறப்படுகிறது. வானிலையை நம்மால் கணிக்க முடியாது.
மீட்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பாக 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளன. அதில் 6 படகுகள் வந்துள்ளன. அவை 3, 12, 14 ஆகிய மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கனமழை வந்தால் அந்த நேரம் படகுகள் தேடி எடுத்து கொண்டு செல்ல முடியாது என்பதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம். தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன. ” என்று சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.