50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது – அமைச்சர் செல்லூர் ராஜூ
50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்காளாக ஏற்ற இறக்கத்தை தான் கண்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.சின்ன வெங்காயத்தின் விலை ரூ.120 வரையிலும் ,பெரிய வெங்காயத்தின் விலை ரூ.96 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. #TNGovt— Sellur K Raju (@SellurKRajuoffl) November 25, 2019
இந்த நிலையில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.