தேர்தல் நேரத்தில் எவ்வளவு ரொக்க பணத்தை கொண்டு செல்லலாம்.?
Election2024 : தேர்தல் நேரத்தில் 50 ஆயிரத்திற்க்கு மேல் ரொக்க பணம் கொண்டு செல்ல கூடாது. – தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்னன் (சென்னை மாநகராட்சி ஆணையர்).
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், நாடு முழுவதும் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துவிட்டது. இந்த தேர்தல் விதிமுறைகளானது தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரையில் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும். மற்ற மாநிலங்களிலும் இதே போல தேர்தல் நடைபெறும் நாள் வரையில் அமலில் இருக்கும்.
இந்த தேர்தல் சமயத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்க பணமாக யாரும் வெளியில் கொண்டு செல்ல கூடாது. அவ்வாறு கொண்டு செல்லும்போது தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் கைப்பற்றினால் அதற்கு உரிய ஆவணங்கள் கொடுத்த பிறகே பணம் திரும்ப கிடைக்கும்.
இது தொடர்பாக சென்னையில் தேர்தல் வேலைகளை கவனித்து வரும், சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன்.IAS., தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பெட்டியில் குறிப்பிடுகையில், பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். இந்த தேர்தல் சமயத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலே எந்த ஆவணங்களும் இன்றி பணத்தை எடுத்துச் செல்ல வேண்டாம்.
தேர்தல் வாக்குப்பதிவு நாள் 19ஆம் தேதி வரையில் மட்டும் மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அண்மையில் இரண்டு மூன்று சம்பவங்கள் நடைபெற்றன. அதில் ஒன்று மருத்துவ செலவுக்காக ரொக்க பணத்தை ஒருவர் எடுத்து வந்ததாக கூறினார்கள். விசாரணைக்கு பின் அந்த பணம் அவர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். இந்த சமயம் ரொக்கபண பரிமாற்றத்தை தவிர்க்க வேண்டும்.
உங்கள் அத்தியாவசியத்தை அதிகாரிகள் புரிந்து கொள்வதை விட, மக்கள் தேர்தல் விதிமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும். முடிந்தவரையில் மக்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலே வெளியில் ரொக்க பணமாக எடுத்துக் கொண்டு செல்ல வேண்டாம் என்பதே எங்களது அறிவுரை என கூறினார்.
மேலும் , செய்தியாளர்களிடம் இன்று சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் 2.35 கோடி ரூபாய் ரொக்க பணம், 8000 கிராம் தங்கம் அதன் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய், 12 ஐபோன் என மொத்தம் சுமார் 7.5 கோடி ரூபாய் அளவில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.