புதுச்சேரிக்குள்ளேயும், வெளிமாநிலங்களுக்கும் செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த நான்கு மாதங்களாக மக்கள் சிரமப்பட்டதாகவும், உண்மையான காரணங்கள் கூறினால் கூட இ-பாஸ் மறுக்கப்படுவதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே நேற்று அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உள்துறை செயலர் கடிதம் எழுதினார்.அவரது கடிதத்தில், மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ-பாஸ் தேவையில்லை.மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடைபடுகிறது. பயணத்துக்கென தனியாக அனுமதி, ஒப்புதல், இ-பாஸ் போன்றவை கூடாது.மாநில அரசின் கட்டுப்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் இன்று முதல் இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…