இனி ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது – அமைச்சர் உதயகுமார்

இனி ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பருவகாலங்களில் ஏற்படும் பேரிடரின் போது மக்களின் பாதுகாப்புக்கு தேவையான விழிப்புணர்வுகளை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது .இனி போதிய விழிப்புணர்வு இல்லாமலோ அல்லது கவனக்குறைவாலோ ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.