யார் என்ன சொன்னாலும்,தமிழ்நாட்டில் நான் மூக்கை மட்டுமல்ல,தலையையும் நுழைப்பேன் – தமிழிசை
எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாய்ப்பு வந்தது ,ஆனால் மக்களோடு மக்களாகத்தான் இருப்பேன் என்று கூறிவிட்டேன் என தமிழிசை பேச்சு.
தெலுங்கானா ஆளுநராக பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றது முன்னிட்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், எனது அப்பா ஒரு தேசிய கட்சித் தலைவர் , அதற்கு நேர்மாறான தேசியக் கட்சியில் நான் தலைவராக இருந்தது தமிழகத்திற்கு செய்த மிகப்பெரும் கடமையாக நினைக்கிறேன். எப்போதும் இயல்பாக மக்களோடு மக்களாக இருக்கும் வாழ்க்கைதான் எனக்கு வேண்டும்.
என் பணி ஆட்சிக்கு இடையூராக இருப்பதாக ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். குடியரசு தினத்தில் என்னை கொடியேற்ற விடவில்லை,ஆளுநர் உரையை என்னை ஆற்றவிடவில்லை. தெலுங்கானாவிலும் , புதுச்சேரியிலும் முழுமையாக பணியாற்றுகிறேன் , தமிழகம் மீது முழுமையான அன்புடன் இருக்கிறேன்.
யார் என்ன சொன்னாலும்,தமிழ்நாட்டில் நான் மூக்கை மட்டுமல்ல,தலையையும் நுழைப்பேன்,வாலையும் நுழைப்பேன் , தமிழ்நாட்டில் காலும் வைப்பேன். ஆளுநர் கருத்து சொல்வதை சட்டம் தடுக்காது. எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாய்ப்பு வந்தது ,ஆனால் மக்களோடு மக்களாகத்தான் இருப்பேன் என்று கூறிவிட்டேன்.’ என தெரிவித்துள்ளார்.