எத்தனை யெச்சூரி வந்தாலும் மோடிதான் அடுத்த பிரதமர்- தமிழக பாஜக தலைவர் தமிழிசை
எத்தனை யெச்சூரி வந்தாலும் மோடிதான் அடுத்த பிரதமர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், இந்து மதத்தை எதிர்த்து மாநாடு நடத்தும் திருமாவளவன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்? என்றும் எத்தனை யெச்சூரி வந்தாலும் மோடிதான் அடுத்த பிரதமர்.தமிழ்நாட்டில் அதிக எம்.பி.க்களை கொண்டிருந்தபோது காங்கிரசால் ஏன் எய்ம்ஸ்-ஐ அமைக்க முடியவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.