எத்தனை முறை நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழ்தான் வாக்கு – சீமான்
எத்தனை முறை நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழ்தான் வாக்கு விழும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரங்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அனிதா பர்வீனை ஆதரித்து, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தங்கள் இனத்தை அழித்தது என்றும் பாஜக மனிதகுல எதிரி எனவும் தெரிவித்துள்ளார்.
அதனால் இந்த இரண்டு கட்சிகளையும் ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்றும் கூட்டணி வைக்கமாட்டேன் எனவும் உறுதிபட தெரிவித்தார். இதனை திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறுவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழகத்திற்கு எத்தனை முறை நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழ்தான் வாக்கு விழும் என்றும் தமிழ் மண்ணில் தாமரை மலராது எனவும் விமர்சித்துள்ளார்.