பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மறுஉருவமாக செயல்படுவேன் என உதயநிதி பேச்சு.
நாகை மாவட்ட த்தில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது இவ்விழாவில் பேசிய அவர், பாஜக எத்தனை சோதனைகளை நடத்தினாலும் திமுகவின் கிளைச்செயலாளர் கூட பயப்படமாட்டான். பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் மறுஉருவமாக செயல்படுவேன்.
திமுகவில் இளைஞரணி, மீனவரணி என சார்பு அணிகள் உள்ளதுபோல பாஜகவின் சார்பு அணிகள்தான் சிபிஐ, அமலாக்கத்துறை என விமர்சித்தார். எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். உங்களை பார்த்து பயப்பட எங்கள் தலைவர் ஒன்றும் ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ கிடையாது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஞாபகம் வச்சுகோங்க எனவும் கூறினார்.
மேலும், அதிமுக ஆட்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்தது. ஆனால், முடிவில் யாரையும் மத்திய பாஜக அரசு கைது செய்யவில்லை. எனவே, பாஜக எத்தனை சோதனைகளை நடத்தினாலும் திமுகவின் கிளைச்செயலாளர் கூட பயப்படமாட்டான். கழகம் வளர்த்த நம் மூத்த முன்னோடிகளுக்கு என்றும் துணை நிற்போம் எனவும் பேசியுள்ளார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…