ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் வெல்ல முடியாது – முதல்வர் பழனிசாமி
திமுக வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டியிருக்கிறார் என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கோவையில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டு இருக்கிறார் என விமர்சித்தார்.
கோவை மாவட்டமே இங்கு குவிந்துள்ளதை பாருங்கள் ஸ்டாலின் அவர்களே என்று கூறி, வலிமையான கூட்டணி, வெற்றி கூட்டணி அதிமுக என கூறியுள்ளார். ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும், நிச்சயமாக வெல்ல முடியாது. அதிமுக கூட்டணி நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் கூட்டணி என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இந்தியா வல்லரசு நாடாக மாற்ற உழைத்து கொண்டியிருக்கிறார் என கூட்டணி கட்சிகளை பற்றி எடுத்துரைத்தார். ஆகையால், வலிமையான கூட்டணி அமைத்து, இந்த தேசம் வலிமை பெற வேண்டும், தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட வெற்றி கூட்டணி என குறிப்பிட்டுள்ளார்.
234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். தற்போது கோவையில் குவிந்துள்ள மக்களை பார்த்தால், சென்ற முறை ஒரு தொகுதியை இழந்தோம், இந்த முறை 100% வெற்றி பெறுவோம் என்பதை வந்துள்ள மக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் கனவை நினைவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.