எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய இயலாது – எஸ்.பி. வேலுமணி

எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய இயலாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி.
ஈரோட்டில் மாநகர மாவட்ட அலுவலகத்தில், கழக அமைப்பு தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய இயலாது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை தான் திமுக செயல்படுத்துவதாகவும், மக்களுடைய பிரச்சனைகளை முன்னெடுத்து வைக்கும் இயக்கமாக அதிமுக செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.