ஆய்விற்காக வரும்பொழுது ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம், எளிய உணவுகளே போதும் என தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அவரின் சீரிய முயற்சியும், தீவிர நடவடிக்கைகளும் பலரையும் வியக்கவைத்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல அதிகாரிகளை மாற்றம் செய்தார்.
அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்களை நியமித்தார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும், இறையன்பு ஐஏஎஸ் அவர் பதவி ஏற்ற நாளிலிருந்து பல சிறப்பான முடிவுகளையம் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். தற்போது இவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ‘அவர் மாவட்டங்களுக்கு ஆய்விற்காக வரும்போது ஆடம்பர உணவு ஏற்பாடுகளை தவிர்த்துவிடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். அவரது சுற்றுப்பயணத்தின் பொழுது சாதாரண காலை மற்றும் இரவு உணவு, இரண்டு காய்கறிகளுடன் சைவ மதிய உணவு இவையே போதுமானவை’ என்று கூறியுள்ளார். இவரது அனுபவம் வழியாக இவர் செய்யும் ஒவ்வொரு செயல்களும் இளைஞர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் விதமாக இருக்கிறது.
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…