ஆடம்பர உணவுகள் வேண்டாம் – தலைமை செயலாளர் இறையன்பு..!

Default Image

ஆய்விற்காக வரும்பொழுது ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம், எளிய உணவுகளே போதும் என தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி  திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அவரின் சீரிய முயற்சியும், தீவிர நடவடிக்கைகளும் பலரையும் வியக்கவைத்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல அதிகாரிகளை மாற்றம் செய்தார்.

அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்களை நியமித்தார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும், இறையன்பு ஐஏஎஸ் அவர் பதவி ஏற்ற நாளிலிருந்து பல சிறப்பான முடிவுகளையம் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். தற்போது இவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ‘அவர் மாவட்டங்களுக்கு ஆய்விற்காக வரும்போது ஆடம்பர உணவு ஏற்பாடுகளை தவிர்த்துவிடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். அவரது சுற்றுப்பயணத்தின் பொழுது சாதாரண காலை மற்றும் இரவு உணவு, இரண்டு காய்கறிகளுடன் சைவ மதிய உணவு இவையே போதுமானவை’ என்று கூறியுள்ளார். இவரது அனுபவம் வழியாக இவர் செய்யும் ஒவ்வொரு செயல்களும் இளைஞர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் விதமாக இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

appavu - pm modi
VCK Leader Thirumavalavan - TN BJP Protest against TASMAC
TN Assembly - Speaker Appavu
TN CM MK Stalin - BJP State president Annamalai
gold price
Annamalai - BJP-Tasmac
TN Assembly Speaker Appavu