லைசென்ஸ் இல்லை,ஹெல்மெட் அணியவில்லை-குடிமகனுக்கு ரூ.16000 அபராதம்

Default Image
தூத்துக்குடியில் லைசென்ஸ் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல் குடிபோதையில் பைக் ஒட்டிய நபருக்கு ரூ,16,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை தூத்துக்குடியில் உள்ள வி.வி.டி  சிக்னல் அருகே போக்குவரத்து காவல்துறையினர்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பைக்கில் வந்த நபர் ஒருவர், லைசென்ஸ் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல் குடிபோதையில்  ஓட்டி வந்தார்.
இதனால் காவல்த்துறை அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அந்த நபருக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கு ரூ.10,000,லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூ.5000,ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூ.1000 என மொத்தம் ரூ,16,000 அபராதம் விதித்தனர்.
இதனை தொடர்ந்து அந்த நபர் நீதிமன்றத்தில் இந்த அபராத தொகையை செலுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்