அரியர் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கழகம் சார்பில் எந்த கடிதமும் தமிழக அரசிற்கு வரவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் கூறியதை அடுத்து மாணவ, மாணவர்கள் முதல்வருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், போஸ்ட்ர்கள் அடித்தும் பாராட்டு மழைகளை பொழிந்தும், நன்றியையும் தெரிவித்தும் வருகின்றனர். ஆனால் அரியர் மாணவர்களுக்கு தேர்வு என்று அறிவித்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பா, அரியர் மாணவர்களுக்கு தேர்வை நடத்தி தேர்ச்சியை அறிவிக்க வேண்டும் என்பது தான் ஏஐசிடிஇ-ன் விதி என்றும் கூறியிருந்தார் .மேலும் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அன்பழகன், தமிழக அரசிற்கு அர்யர் தேர்வு தொடர்பாக எந்த கடிதமும் ஏஐசிடிஇ மற்றும் யுஜிசி-யிடம் இருந்தும் வரவில்லை என்றும், அவ்வாறு ஒரு கடிதம் வந்திருந்தால் அதை சூரப்பா வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…