கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடையில்லை – ஹைகோர்ட்

கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடையில்லை என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பத்தூரில் உள்ள விமான நிலையத்தில் ஓடுதளம் மிகவும் சிறியதாக இருப்பதால் சர்வேதேச விமானங்களை தரையிறக்குவது மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் விமான நிலையத்தை விரிவுபடுத்த அருகில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்தது. அப்போது, முறையாக கருத்துக்களை கேட்டகவில்லை என்றும் தங்களின் எதிர்ப்புகளை பரிசீலினை செய்ய வேண்டும் எனவும் கோவை காளப்பட்டியை சேர்ந்த அம்மணியம்மாள் உள்ளிட்ட 12 பேர் வழக்கு தொடுத்தனர். இதன் காரணமாக நிலம் கையகப்படுத்துவதை நீதிமன்றம் தடை செய்திருந்தது.
இந்நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் அப்பீல் வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இழப்பீடு பெறாதவர்களுக்கு ஒரு மாதத்தில் இழப்பீடு தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. சர்வதேச விமான நிலையத்தை சுமார் 5,000 கோடி ரூபாய் செலவில் விரிவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025