எனது வீட்டில் வருமானவரி சோதனை நடைபெறவில்லை.! – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.!
எனது வீட்டில் சோதனை நடைபெறவில்லை. எனது சகோதரர் வீட்டில் தான் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்பந்தப்பட்டவர்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் என பல்வேறு நபர்களின் வீடுகளின் நடைபெற்று வருகிறது.
முதலில் சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் கரூரில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினரை சோதனை செய்ய அனுமதிக்காமல் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் அந்த குறிப்பிட்ட சில பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
அதே வேளையில், சென்னை தலைமை செயலகத்தில், டாஸ்மாக் பிரிவு அரசு அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது அந்த ஆலோசனை கூட்டத்தில் செய்தியாளர்கள் வருமானவரித்துறை சோதனை பற்றி கேட்டுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, எனது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறவில்லை. கரூரில் உள்ள வீடு , சென்னையில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெறவில்லை. எனது சகோதரர் (அசோக்) வீட்டிலும், அவருக்கு தெரிந்தவர்கள் வீடுகளிலும் தான் சோதனை நடைபெறுகிறது எனவும், வருமான வரித்துறை சோதனை முழுதாக நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து முழு விளக்கம் அளிப்பதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.