தமிழகத்தில் சட்டவிரோத குவாரிகள் இல்லை – அரசு விளக்கம்
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை என தமிழக அரசு விளக்கம்.
கனிமவள குவாரிகள் தொடர்பாக அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, கோவையில் சட்ட விரோதமாக குவாரிகள் செய்படுவதாக அங்ககுள்ள விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். இதனை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தையும் முன் எடுத்தனர். அப்போது, அம்மாவட்ட ஆட்சியர் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை, அவ்வாறு செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.