கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் காட்ட கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் காட்ட கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இதுவரை கொரோனா வைரஸால் தமிழகத்தில், 22,333 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 173 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 5-ம் கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், கொரோனா பரிசோதனைக்கு எந்த தயக்கமும் கட்டக் கூடாது என்றும், சளி, இருமல் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த தொய்வும் இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் தொற்று அதிகரித்துள்ளது. தளர்வுகள் அதிகரிக்கும் சூழலில், சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என கூறியுள்ளார்.