“நோ ஹெல்மெட் ; நோ என்ட்ரி”.! சேலத்தில் வந்தது புதிய திட்டம்.!

Default Image
  • ஹெல்மெட் அணியாமல் 90% சதவீத இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி உரிழந்துள்ளனர் என சேலம் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு.
  • “நோ ஹெல்மெட் ; நோ என்ட்ரி” என்ற புதிய திட்டம் சேலத்தில் அறிமுகம் செய்துள்ளது.

உயிர்காக்கும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் பழக்கமாக கொள்ள வேண்டும் எனவும் செல்போன் போல தவறாமல்  ஹெல்மெட்டையும் எடுத்து செல்ல வேண்டும், என்று காவல்துறை அறிவுரை கூறிய வருகிறது. பின்னர் இருசக்கர வாகனத்தை எவ்வளவு தூரம் ஓட்டி சென்றாலும் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் எனவும், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போதும், சந்தைக்கு செல்லும் போது, ஹெல்மெட் கட்டாயம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் 90% சதவீத இளைஞர்கள் விபத்துக்குள்ளாகின, அந்த விபத்துகளை தடுக்க பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், ஹெல்மெட்டின் அவசியத்தை கொண்டு முதல் கட்டமாக ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறை புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது புதிய திட்டத்தின் கீழ் சுந்தர்ராஜ் மற்றும் அன்னதானபட்டி ஆகிய பகுதிகளில் ஹெல்மெட் சாலைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பின்பு “நோ ஹெல்மெட் நோ என்றி” என்ற புதிய திட்டம் சேலம் மாநகரத்தில் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்