எந்த அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை – இபிஎஸ்-க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி.!

Published by
Muthu Kumar

திமுக ஆட்சிக்கு வந்த பின் ஒரு அரசு பேருந்தையும் நிறுத்தவில்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவொரு அரசுப் பேருந்தும் நிறுத்தப்படவில்லை எனவும், எடப்பாடி பழனிசாமி வீணாக பொய் அறிக்கை பரப்பவேண்டும் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நகரப்பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டிய நிலையில் அமைச்சர் சிவசங்கர் பதில் கொடுத்துள்ளார்.

மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள இரண்டு ஆண்டுகள் முறையே 1,216 கோடி மற்றும் 2,546 கோடி என கிட்டத்தட்ட 3,500கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, மற்றும் 2000 புதிய பேருந்துகள், 1500 பழைய பேருந்துகளை சீரமைக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதனை மறைத்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய் பிரச்சாரம் செய்வதாக தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், அதிமுக ஆட்சியில் தான் ஒரு ஓட்டுனர், நடத்துனர் கூட பணியில் சேர்க்கப்படவில்லை, இதனால் ஓட்டுநர், நடத்துனர் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

11 minutes ago

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

2 hours ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

2 hours ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

2 hours ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

2 hours ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

3 hours ago