சூதாட்ட கிளப்புகள் வேண்டாம் – கிரண் பேடி

- புதுச்சேரி அரசு கேசினோ எனப்படும் சூதாட்ட கிளப்புகளை தொடங்க முடிவெடுத்தது.
- இதற்கு கிரண் பேடி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி இடையே அதிகாரப்போட்டி அதிகரித்து வந்தது.இதன்விளைவாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண் பேடி தலையிடக்கூடாது என்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017ல் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அனுமதி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.மேலும் இது தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் மோதல் குறைந்த பாடில்லை.
இந்நிலையில் புதுச்சேரி அரசு கேசினோ எனப்படும் சூதாட்ட கிளப்புகளை தொடங்க முடிவெடுத்தது.இது குறித்து புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறுகையில், வளர்ச்சி என்ற பெயரில் சூதாடுவது கஷ்டப்பட்ட பணத்தை தொலைப்பதை புதுச்சேரி மக்கள் யாரும் விரும்பமாட்டார்கள்.
சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதியளித்தால் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை மக்கள் இழந்து விடுவார்கள் .குறிப்பாக மாணவர்கள் சூதாட்டம் ஆடியும், பீர் குடித்தும் அதற்கு அடிமையாகி ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025