திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட ஓபிஎஸ்-க்கு மன்னிப்பே கிடையாது – ஜெயக்குமார்
ஓபிஎஸ், சசிகலா, தினகரனைத் தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் சேர்ப்பது பற்றி கட்சி முடிவு செய்யும் என ஜெயக்குமார் பேட்டி.
அதிமுகவில் சமீப காலமாக தொடர்ந்து பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், தற்போது பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் நேற்று டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்பை தொடர்ந்து, ஓபிஎஸ் சசிகலாவை சந்திக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், ஓபிஎஸ்- டிடிவி தினகரன் இணைந்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஓபிஎஸ் டிடிவி தினகரனை பாஜக சேர்த்துக் கொண்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட ஓபிஎஸ் க்கு மன்னிப்பே கிடையாது என தெரிவித்துள்ளார்.
மேலும், ஓபிஎஸ், சசிகலா, தினகரனைத் தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் சேர்ப்பது பற்றி கட்சி முடிவு செய்யும். டிடிவி தினகரன் சொல்வதை எல்லாம் நகைச்சுவையாக தான் எடுத்துக் கொள்வார்கள். சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஓபிஎஸ் தற்போது சின்னம்மா என்று கூறுகிறார். சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திவிட்டு தினகரனை சந்தித்துள்ளார் என விமர்சித்துள்ளார்.