உணவுப்படி இல்லை.. ஹோட்டலும் இல்லை.. நாங்கள் என்னதான் செய்வோம்? புலம்பும் காவலர்கள்!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகம் அடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்குமாறு கூறி வந்தனர்.
மேலும் அரசு பணியாளர்கள் காவல்துறையினர், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் தங்களது வேலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகரில் பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு உணவு பிடி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் காவலர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும், தங்கள் கைக்காசு போட்டு சாப்பிட சாப்பாடு வாங்க சென்றாலும், ஊடரங்கு உத்தரவினால் பெரும்பாலான ஹோட்டல்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருக்கிறது. காவல்துறையினர் பணியின்போது சாப்பாடு உணவு கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டு வருவதாக கூறிவருகின்றனர்.