சூரப்பா விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது – நீதிமன்றம்..!

Published by
murugan

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், விசாரணை ஆணையததிற்கு தடை விதிக்க கோரி சூரப்பா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சூரப்பா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து 2020 வரை சூரப்பா மீது எந்த சிக்கலும் ஏற்படவில்லை. அரியர் தேர்வு விவகாரம், அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக அறிவிப்பதற்கான முயற்சியில் அரசுடன் ஏற்பட்ட கருத்து வேற்பாடுகள் காரணமாக சூரப்பா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அரியர் தேர்வு விவகாரம், அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு உயர்கல்வி ஆகியவற்றின் காரணமாக சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே முன்னாள் துணைவேந்தர்கள் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளனர். விசாரணை ஆணையம், அறிக்கை அளித்தாலும், அதன் மீது அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை.

இந்த விவகாரத்தில் ஆளுநர் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். மனுவுக்கு பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன் வரும் மார்ச் 15-ஆம் தேதிக்குள் சூரப்பாவின் மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு  உத்தரவு பிறப்பித்து விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.

அதற்குள் விசாரணை ஆணையம் அறிக்கை அளித்தால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Published by
murugan
Tags: Surappa

Recent Posts

“ஆட்டத்தை போடு மாமே”..ஒன்றாக குத்தாட்டம் போட்ட தனுஷ் -சிவகார்த்திகேயன்!!

“ஆட்டத்தை போடு மாமே”..ஒன்றாக குத்தாட்டம் போட்ட தனுஷ் -சிவகார்த்திகேயன்!!

சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…

13 minutes ago

ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் : தமிழிசை, அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…

45 minutes ago

2.40 கோடி தான்..! சென்னை அணிக்கு மீண்டும் திரும்பினார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரன்!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…

57 minutes ago

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…

1 hour ago

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால் விடுதலை அடைய முடியாது – கனிமொழி!

சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…

2 hours ago

காரசாரமான புளி மிளகாய் செய்வது எப்படி?.

சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய்  ரெசிபியை  ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…

2 hours ago