சிபிசிஐடி மீது நம்பிக்கை இல்லை.. சிபிஐ வேண்டும்.! தமிழிசை கோரிக்கை.!
தமிழிசை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
இந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தில் ஆளுநரை சந்திக்க போவதாக ஏற்கெனவே அண்ணாமலை கூறியிருந்த நிலையில் இன்றைய தினம் ஆளுநரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
மேலும், இந்த சந்திப்பு முடிந்து வெளிய வந்த முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார்.
அவர் கூறுகையில், “கள்ளக்குறிச்சியில் நடைபெற்று இருக்கின்ற இந்த சம்பவத்தால் மக்கள் இறந்து கொண்டிருப்பதும், பல நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்திருப்பதையும் தமிழக அரசு கையாளும் விதம் சரியாக இல்லை என்பதே எங்கள் கருத்தாகும்.
இதில் திமுகவை சேர்ந்தவர்களே ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுளோம் என கூறுகிறார்கள். அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை, ஏனென்றால் மாநில அரசை தாண்டி அவர்கள் எதையும் கண்டுபிடிக்க போவதில்லை.
எனவே, இந்த சம்பவத்தின் உண்மையை கண்டறியுவதற்கு சிபிஐ விசராணை வேண்டும் என்பதே எங்களது தீர்க்கமான ஒரு கோரிக்கையாக வைத்திருக்கிறோம், அதே போல அங்கு சிச்சை பெற்று வருபவர்களில் பாதி பேர் கண் பார்வை இழந்திருக்கிறார்கள் பல பேர் இன்னும் அபாயகரமான சூழ்நியில் இருக்கிறார்கள்.
இந்த கள்ளச்சாராய சம்பவத்தை புதன்கிழமை தான் கண்டுபிடித்திருக்கிறோம் என கூறுகிறார்கள். ஆனால், செவ்வாய்கிழமையே சிகிச்சைக்காக பொதுமக்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்றுருக்கிறார்கள். இந்த இடத்தில் இதை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடிக்க தவறி இருக்கிறது.
அது மட்டுமில்லாமல், அடுத்த நாள் மாவட்ட ஆட்சியருடன், திமுகாவின் எம்,எல்.ஏவும் சேர்ந்து இதனை மறைந்திருக்கிறார். இதற்கு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்திருக்கிறார்கள், எஸ்.பியை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்.
ஆனால், உண்மையை மறைத்த எம்.எல்.ஏ மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே மக்கள் பாதிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாகவே அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதனால், அரசின் இந்த பாரபட்சம் நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.
மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில் கூட முதலைமைச்சரோ இல்லை அந்த துரையின் அமைச்சரோ பாதிப்படைந்த மக்களை அங்கே சென்று பார்க்க வேண்டுமென்று கூட நினைக்காதது எந்த அளவிற்கு திராவிட மாடல் அரசு மக்களை மதிக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே இருக்கிறது.
இதெல்லாம் குறித்து தான் நாங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஆளுநரிடம் தெரிவித்திருக்கிறோம்” என அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறி இருந்தார்.