பெரியார் என்ற மாமலையைத் தொட்ட எதிரி யாரும் நிலைத்து நின்றதில்லை – சீமானுக்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!

பெரியார் என்ற மாமலையைத் தொட்ட எதிரி யாரும் தமிழ்நாட்டில் நிலைத்து நின்றதில்லை என சீமான் பேச்சுக்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். 

kovi chezhian

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ச்சியாக பெரியார் பற்றி விமர்சனம் செய்து வருகிறார்.

இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும்  சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். குறிப்பாக, நேற்று திமுக எம்பி கனிமொழி பேசியிருந்தார்.

அந்த வகையில், அமைச்சர் கோவி.செழியன்  பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “பெரியார் என்ற மாமலையைத் தொட்ட எதிரி யாரும் தமிழ்நாட்டில் நிலைத்து நின்றதில்லை அப்படி பேசியவன் கற்றோடு காற்றாக பறந்து போவான். இது பெரியார் மண்..அண்ணா மண்..கலைஞர் மண் என்பதை ஈரோடு இடைத்தேர்தல் எடுத்துரைக்கும். நான் திராவிடன்..பெரியார் இல்லை என்றால் நான் மனிதன் இல்லை என்று சொன்ன சீமானும் உண்டு. ஆனால், இன்றைக்கு கைக்கூலியாக மாறி பெரியாரின் கொள்கைகளுக்கு எதிராக பேசி வருகிறார்.

சீமான் பேச்சுக்கு முத்த தலைவர்கள் பலரும் கண்டித்து பேசியுள்ளார்கள். அவர்களுடைய வழியில் சொல்லவேண்டும் என்றால் சீமான் செயல் தமிழகத்தில் புறக்கணிக்கப்படவேண்டிய ஒரு செயல். எந்த ஆயுதத்தை எடுத்து விளையாடவேண்டும் என்று தெரியாமல் அவர் விளையாடி கொண்டு இருக்கிறார். தந்தை பெரியார் என்பவர் பெரிய எரிமலை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவர் தான் காரணம்.

அண்ணாவுக்கு தெரியாத அரசியல் தெளிவு, கலைஞருக்கு தெரியாத அரசியல் தெளிவு இவருக்கு தெரியாது என பேசுவது அண்ணாமலையும், தமிழிசையும் வரவேற்கிறார்கள் என்று சொன்னால் யாருடைய ஜெராக்ஸ் Copy சீமான் என்பது அவருடைய பேச்சிலே புரிகிறது நாங்கள் இதனை தெளிவுபடுத்த விரும்பவில்லை. அவருடைய கருத்தை நாங்கள் பெரிய பொருட்டாக எடுக்கவில்லை, அவருடைய கருத்து புறக்கணிப்பட வேண்டும்” எனவும் பட்டுக்கோட்டையில் அமைச்சர் கோவி.செழியன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்