தமிழகத்தில் மின் தடை ஏற்படாது..அமைச்சர் உறுதி…!!
நாமக்கல் மாவட்டம் மோகனூர் – வாங்கல் காவிரி ஆற்று உயர் மட்ட பாலத்தில் 63.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மின் விளக்கு வசதிகளை மின் துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.இதையடுத்து , செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி , வல்லூர் அனல் மின்நிலையத்தில் 1500 மெகாவாட் மின்னுற்பத்தித் தடைபட்டிருந்தாலும் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படாது என்று உறுதியளித்தார்.