முன்கூட்டியே பள்ளி தேர்வுகள் இல்லை.. விடுமுறைக்கும் சூழல் இல்லை – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முன் கூட்டியே தேர்வு நட்ட்தும் திட்டம் இல்லை என அமைச்சர் பேட்டி.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு சூழல் ஏற்படவில்லை, இருப்பினும் காய்ச்சல் தொடர்பாக மருத்துவத்துறை ஆலோசனையின்படி செயல்படுவோம் என தெரிவித்தார்.
பொதுத்தேர்வில் மாணவர்கள் பங்கேற்காது ஏன் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. தேர்வுக்கு பயந்து வராமல் இருக்கிறார்களா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது.
1 – 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். காய்ச்சலால் பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்படவில்லை. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இதனிடைய, சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.