இ-பாஸ் இல்லாமல் இந்த மாவட்டத்திற்குள் சென்றால் சட்டப்படி நடவடிக்கை.!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் இ-பாஸ் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்கத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இனி வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் இ-பாஸ் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே நுழைய கூடாது என அம்மாவட்ட எஸ்பி.மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.