#BREAKING: பாரசிட்டமால் பெற மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை -தமிழக அரசு
பாரசீட்டமால் பெற மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மதுரையை சேர்ந்த ஜோயல் குமார் என்பர் பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.எனவே தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
அப்பொழுது தமிழக அரசு சார்பில், பாரசீட்டமால் பெற மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.மேலும் இது தொடர்பாக எந்த உத்தரவு பிறப்பிக்கப்பவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.இதனை அடுத்து உயர்நீதிமன்ற மதுரை வழக்கினை முடித்து வைப்பதாக அறிவித்துள்ளது.