கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர் சாதியினர் தங்களை கோயில் வழிபாடு செய்யவிடாமல் தடுப்பதாகவும், குலசாமி பூஜை செய்ய அனுமதி கோரியும் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு.
கோயில் வழிபாட்டில் சாதிய பாகுபாடு காட்டக்கூடாது, அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி அருகே மாதரசி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்த ஒரு தரப்பினர் தடுப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிவராத்திரியை ஒட்டி கோயிலில் குலசாமி வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை என பட்டியலின மக்கள் வழக்கு தொடுத்துள்ளனர். கோயில் பிரச்னையை சுமுகமாக தீர்க்க மாவட்ட நிர்வாகத்திற்கு ஆணையிட்டு விசாரணையை தள்ளிவைத்தார் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன். அனைவரும் அமைதியான முறையில் வழிபாடு நடத்துவதை தென்காசி மாவட்ட நிர்வாகம், காவல்துறை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.