எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது …!தமிழக பாஜக தலைவர் தமிழிசை
எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், வெற்றி வந்தால் பாஜக துள்ளிக் குதிக்க போவதுமில்லை. தோல்வி வந்தால் துவண்டு போவதுமில்லை.மோடி அலை ஓயாது, ஓய வைக்கவே முடியாது.இதுநாள் வரை வாக்கு இயந்திரங்களில் குளறுபடி உள்ளது என கூறிய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.