கொரோனா தொற்றில்லாத மாவட்டமானது “கோவை” ! – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கொரோனா தொற்றில்லாத மாவட்டமானது “கோவை” என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரேனா வைரஸின் தொடக்க காலத்தில் கோவை மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கோவை ESI மருத்துவமனையில் 146 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதால் கோவையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 145ஆக உயரிந்துள்ளது. இதனால் தற்போது கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக கோவை மாறியதாக மாவட்ட ஆட்சியர் கே. ராஜாமணி தெறிவித்துள்ளார். கோவையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் மட்டுமே உயரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.