நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பான அறிக்கையில் ,ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.மேலும் கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியில்லை என்றும் கூறினார்.தற்போது கமலின் மக்கள் நீதி மய்யமும் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…