காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று அவரச ஆலோசனை நடத்துகிறார்.
புதுச்சேரியில் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன், நாளை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டிருந்தார். நாளை மாலை 5 மணிக்குள் வாக்கெடுப்பை நிறைவு செய்யவும், முழு நிகழ்வையும் வீடியோ பதிவு செய்யவும் ஆளுநர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி இன்று அவரச ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் நாளை நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதனிடையே, அனைத்து சட்டமன்ற உறுப்பினருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி என இரு கட்சிகளுக்கும் தலா 14 சட்டசபை உறுப்பினர்களை சமபலமாக கொண்டுள்ளது. மேலும் நியமன எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களிப்போம் என்றும் கூறிருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இதனிடையே, புதுச்சேரி அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் தலைமை அழைப்பு காரணமாக தற்போது சென்னை சென்றுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…