தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முதல் உத்தரவாக நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற அறிவிப்பை அமலுக்கு கொண்டு வரும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட நகர பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் முதல்வராக பதவி ஏற்ற பின்பு அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் எனும் முதல் அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இந்த அறிவிப்பு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உடனடியாக அமலுக்கு வருகிறது.
எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர பேருந்துகளிலும் மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை எனும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஸ்டிக்கர் ஒட்டும் பணியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்கள் பார்வையிட்டு, இது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கோயில் யானை தெய்வானை மிதித்ததில்…
வாஷிங்டன் : உலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக…
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…